வடக்கு47 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

47 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியாரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து நேற்று இரவு சோதனை மேற்கொண்ட பொலிசார் 47 கிலோகிராம் கஞ்சாவை மீட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 44 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தொடந்தும் விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், சான்று பொருட்களையும், சந்தேக நபரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles