ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தேயிலை தோட்டத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (03) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் செனன் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
அவர் ஹட்டன் இபோச டிப்போவில் பணிபுரிந்து வருவதாகவும், உயிரிழந்தவர் நான்கு நாட்களாக பணிக்கு சமூகமளிக்கவில்லை எனவும் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் செனன் தோட்டத்திற்கு அருகில் அட்டன் ஓயாவில் பாயும் ஆற்றுப்பகுதியில கண்டெடுக்கப்பட்ட சடலத்தை அட்டன் நீதவான் பரிசோதித்ததன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக திக் ஓயா வைத்தியாசாலைக்குச் கொண்டுச்செல்லப்படவுள்ளதாக தெரிவித்த ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.