இன்றைய தினம் வட மாகாணத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறது.
மாகாண மட்டத்திலான தொழிற்சங்க நடவடிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள நிலையில், இன்றைய தினம் இரண்டாம் நாளாக வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகிறது.
பணிப்புறக்கணிப்பின் முதலாம் நாளான நேற்றைய தினம் ஊவா மாகாணத்தில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.