தலவாக்கலையில் இருந்து பூண்டுலோயாவை நோக்கி செல்லும் பிரதான வீதியில் கொஸ்காவத்தை பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று, கொஸ்காவத்தை பகுதியில் பேருந்து ஒன்றுக்கு வழிவிட ஒதுங்கிய போது கல் ஒன்றின் இடுக்கில் இறுகிக் கொண்ட நிலையில் இவ்வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
மாற்று வீதிகள் இல்லாத காரணத்தால் இவ்வீதியின் ஊடாக வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் இடுக்கில் இறுகிய முச்சக்கர வண்டியை பாதுகாப்பாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.