கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாயவனூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இராமநாதபுரம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது 2,800 லீட்டர் கோடா பொலிசாரல் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
அவர்களை கைது செய்யும் நடவடிக்கை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.