முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகள் தமது சொத்துக்கள், கடன்கள் தொடர்பான விபரங்களை எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பிலேயே பிரதிவாதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று பிறப்பித்தது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலாந்த ஜெயவர்தன ஆகியோருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நான்கு பிரதிவாதிகளும் மொத்த இழப்பீட்டுத் தொகையை செலுத்தத் தவறியதைக் கருத்தில் கொண்டே உச்ச நீதிமன்ற இந்த உத்தரவை பிறப்பித்தது.