Sunday, October 19, 2025
27 C
Colombo
வடக்குசெய்தி ஆசிரியர்  டிலீப் அமுதனிடம் நான்கரை மணிநேரம் விசாரணை

செய்தி ஆசிரியர்  டிலீப் அமுதனிடம் நான்கரை மணிநேரம் விசாரணை

2020 ஆண்டு உதயன் பத்திரிகையில் வெளியான செய்திகள் மற்றும் ஒளிப்படம் தொடர்பாக உதயன் பத்திரிகை செய்தி ஆசிரியர்களில் ஒருவரான கு. டிலீப் அமுதனிடம் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி உதயன் பத்திரிகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் தொடர்பான செய்தியும், ஒளிப்படமும் வெளியாகியிருந்தது.

அது தொடர்பாகவும், அன்றைய தினம் வெளியாகியிருந்த தமிழ்த் தேசியக் கட்சி மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு அழைப்பு விடுத்திருந்த செய்தி தொடர்பாகவுமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு நேற்று (01) காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணிவரை 4.30 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் செய்தி மற்றும் ஒளிப்படம் தொடர்பாக, யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles