ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க, நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில், கொள்கை ரீதியில் தாம் இணங்குவதாக ஜனாதிபதி கடந்த தினம் அறியப்படுத்தியிருந்தார்.
இதற்கமைய, அரசாங்க மற்றும் சுயாதீன அணிகளின் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அது குறித்து முதலாம் கட்ட பேச்சுவார்த்தைஇன்று இடம்பெறும் எனத் தெரிவித்திருந்தார்.