யாழ்ப்பாணம் – வடமராட்சியில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவத்தில் தொடர்ச்சியாக ஈடுபடும் நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (30) இரவு நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த நபரிடம் இருந்து ஐந்து தண்ணீர் மோட்டார்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் தொடர் மோட்டார் திருட்டுக்கள் இடம்பெற்று வந்தன. இவை தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
போதைப்பொருள் பாவனைக்காக குறித்த இளைஞன் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் திருட்டுக்களில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.