இலங்கைக்கான உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் (செயலாற்று) அனஜெடி தலைமையிலான குழுவினர் இன்று கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர்.
வட மாகாணத்தில் உலக வங்கியின் சுமார் 1400 மில்லியன் ரூபா நிதி பங்களிப்புடன் சுமார் 50க்கும் மேற்பட்ட பிரதேச வைத்தியசாலைகளின் தொழில்நுட்ப கூடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன.
அவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட்டதில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை பார்வையிடும் முகமாக குறித்த குழுவினர் வருகை தந்தனர்.
இவ்வாறு வருகை தந்தவர்களுக்கு கோப்பாய் வைத்தியசாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் உயர் மட்ட கலந்துரையாடலும் இடம்பெற்றது.