அனுமதிப்பத்திரம் இன்றி ஆறரை அடி உயரமான கஞ்சா செடியை பயிரிட்ட ஒருவர் அம்பாறை உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குமாரிகம பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கஞ்சா செடி பயிரிடப்பட்டு வந்த நிலையில் நேற்று (26) மாலை பொலிஸாரின் சுற்றிவளைப்பின் போது அவை கைப்பற்றப்பட்டன.
உஹன பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டதுடன், கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உஹன பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்