Saturday, March 28, 2026
31.7 C
Colombo
வடக்குயாழில் கடையொன்றில் தீப்பரவல்

யாழில் கடையொன்றில் தீப்பரவல்

யாழ் நகரில் காங்கேசன்துறை வீதியில் உள்ள கடையொன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கோயில் சிலைகள் பித்தளை உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற யாழ் மாநகர சபை தீயணைப்பு படையினர் தீப்பரவலை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் மின்னொழுக்கு காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles