Tuesday, April 29, 2025
28.1 C
Colombo
வடக்குஅதிக போதைப்பொருள் பாவனையால் ஒருவர் மரணம்

அதிக போதைப்பொருள் பாவனையால் ஒருவர் மரணம்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் அதிக போதைப்பொருள் பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் தனது தாயாருடன் உடுவில் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று காலை கழிப்பறைக்கு சென்று விட்டு நீண்ட நேரம் திரும்பி வராததால், அவரது தாயார் கதவை திறக்க முயன்றுள்ளார். எனினும் கதவு திறக்கப்படாததால், அதனை உடைத்து பார்த்த போது அவர் இறந்த நிலையில் காணப்பட்டார்.

அவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின்படி அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது.

அவரது வீட்டிலும் போதைப்பொருள் ஏற்றும் ஊசி உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles