கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட புத்தக பைகள் நாவிதன்வெளி அஸ் சிராஜ் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வேண்டுகோளின் பேரில் சீனாவின் யூவான் மாகாணத்தால் ஒரு தொகை பாடசாலை புத்தகப்பைகள் மாணவர்களுக்காக அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.