Saturday, April 19, 2025
30 C
Colombo
வடக்குவட்டக்கச்சி பகுதியில் இளைஞன் கொலை

வட்டக்கச்சி பகுதியில் இளைஞன் கொலை

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பத்தர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த வெற்றிலை வாங்குவதற்காக கடைக்கு சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையோர் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கட்டையால் தாக்கப்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்று நீதவான் விசாரணைகள் முன்னெடுத்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை கைது செய்ய குற்றத்தடுப்பு பொலிஸார் நடவடிக்கை எடுத்து ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles