Saturday, November 1, 2025
25 C
Colombo
சினிமாரசிகர்களால் லோகேஷுக்கு காயம்

ரசிகர்களால் லோகேஷுக்கு காயம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுவருகிறது.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளதுடன், அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து ‘லியோ’ படக்குழுவினர் கேரளாவில் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகின்றனர்.

இதன்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்களால் காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், ‘உங்கள் அன்பிற்கு நன்றி கேரள மக்களே. கூட்டத்தில் சிறிது காயம் ஏற்பட்டுவிட்டது. இதனால் அடுத்து நடந்த இரண்டு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. உங்களை சந்திப்பதற்காக மீண்டும் வருவேன். அதுவரை இதே அன்புடன் ‘லியோ’வை ரசித்து கொண்டிருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles