நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
“பொது மக்களில் ஒரு பகுதியினர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. முழு நாடும் நெருக்கடியின் இருக்கும் போது, ஆளும் கூட்டணி பிளவுபட்டு பெரும்பான்மையை அமைக்க முயற்சிக்கிறது”
நாம் உண்மையாகவே நெருக்கடிகளுக்கு தீர்வு காண்கிறோமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.