அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் காரணமாக சீன அரசாங்கத்தினால் நன்கொடை மூலம் கிடைக்கப்பெற்ற மண்ணெண்ணெய், வேலணை புங்குடுதீவு கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு நேற்று (23) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் துறைசார் அதிகாரிகளால் வழங்கிவைக்கப்பட்டது.
புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
கடற்றொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக 75 லீற்றர் வீதம் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் கட்டமாக 78 லீற்றர் என்ற அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.