யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் திட்டத்தின் கீழ் மன்னார் எருக்கலம்பெட்டியில் நிர்மாணிக்கப்படவுள்ள குவைத் ஸகாத் ஹவுஸ் வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றது.
இந்த வீட்டுத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 75 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக 105 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 125 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. இங்கு கட்டப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 18 லட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது.
கிராமப்புற பொருளாதார அமைச்சர் காதர் மஸ்தானின் அழைப்பின் பேரில், குவைத் ஜகாத் ஹவுஸ் இந்த வீட்டுத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்குகிறது.