Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
மலையகம்நச்சுப் புகையை சுவாசித்த 10 பேர் வைத்தியசாலையில்

நச்சுப் புகையை சுவாசித்த 10 பேர் வைத்தியசாலையில்

நச்சுப் புகையை சுவாசித்ததால் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை தலவாக்கலை நகரில் அமைந்துள்ள ஜவுளி மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நச்சுப் புகையை சுவாசித்ததால் 9 பெண்களும் ஒரு ஆணும் தலவாக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 20-22 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்று தலவாக்கலை நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், கடையின் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதை அடுத்து, இந்த நச்சுப் புகை வெளியேறியுள்ளது.

நச்சுப் புகையை சுவாசித்த மேற்படி நபர்களுக்கு கடுமையான தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளதுடன், அதன் பின்னரே லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles