மன்னார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மது போதையில் செலுத்திய சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று (19) உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 18 ஆம் திகதி மாலை தலைமன்னார் நோக்கி பயணிகளுடன் சென்ற பேருந்தின் சாரதி குடிபோதையில் வாகனத்தை செலுத்திய நிலையில் மன்னார் போக்குவரத்து பொலிஸாரால் மன்னார் வைத்தியசாலை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த சாரதி மது போதையில் வாகனத்தை செலுத்தியமை உறுதி செய்யப்பட்ட நிலையில் சாரதி நேற்று (19) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதற்கமைய, குறித்த சாரதியை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.