காலி முகத்திடல் போராட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி மாளிகையின் அறையொன்றில் இருந்து 17.85 மில்லியன் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படாது என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேற்று (18) நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.