நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா, சலங்கந்தை – ஒட்டரி பிரிவில் மதுபானசாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (18) போராட்டமும், பேரணியும் முன்னெடுக்கப்பட்டன.
ஆன்மீக தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மலையகம் தற்போதுதான் மாற்றம் கண்டு வருகின்றது. எமது சமூகமாற்றத்துக்கு இந்த மதுபானசாலைகள் பெரும் தடையாக உள்ளன. எனவே, எமது பகுதிக்கு மதுபானசாலை வேண்டாம் என இளைஞர்கள் தெரிவித்தனர்.