Saturday, March 28, 2026
31.7 C
Colombo
வடக்குகிளிநொச்சியில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரும் இணைத்து மேற்கொண்ட சோதனையின்போது 5 கிலோ கிராமுக்கு அதிக எடையுள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மோட்டார் சைக்கிள் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணேசபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மறைத்து எடுத்து செல்லப்பட்ட கஞ்சாவுடன் கைவிடப்பட்ட காணிக்குள் சந்தேக நபர் சென்றுள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்ற விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் அதனை சோதனையிட்டனர்.

இதன்போதுஇ மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரும்இ அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சா பொதிகளும் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒட்டடைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles