சீன அரசாங்கத்தின் நன்கொடை மூலம் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (17) காலை முல்லைத்தீவு – நகர்பகுதியில் முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கு முதல்கட்டமாக 75 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் கட்டமாக 78 லீற்றர் என்ற அடிப்படையில் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.