மலையக பாதையூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹப்புத்தளை – தியத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதனால் இந் நிலை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், தடம் புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிமர்த்தி வைப்பதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.