நவீன வசதிகளுடன்கூடிய பேருந்து தரிப்பிடமாக ஹட்டன் பேருந்து தரிப்பிடம், புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக இன்று (16) கையளிக்கப்பட்டது.
ஹட்டன் பேருந்து தரிப்பிடமானது குன்றும், குழியுமாகவே காணப்பட்டது. மழைகாலங்களில் பேருந்து தரிப்பிடத்தில் நீர் தேங்கி இருப்பதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் பேருந்து தரிப்பிடத்தை புனரமைத்துதருமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமானிடமும், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனிடமும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதன் பின்னர், பேருந்து தரிப்பிட நிலைய வீதி மற்றும் வடிகாலமைப்பு ஆகியன புனரமைப்பு செய்யப்பட்டு இன்றைய தினம் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.