Sunday, July 20, 2025
26.7 C
Colombo
வடக்குஇளம் பெண் சடலமாக மீட்பு - கணவன் கைது

இளம் பெண் சடலமாக மீட்பு – கணவன் கைது

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் மனைவியை கொன்று தப்பிச் செல்ல முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் கணவன் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவற்குழி ஐயனார் கோயிலடியைச் சேர்ந்த அஜந்தன் யமுனா என்கிற (23) இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் கணவன் தலைமறைவாகியிருந்ததுடன், பொலிஸார் சந்தேக நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

குடும்ப தகராறில் கணவரால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகில் முச்சக்கரவண்டியில் சந்தேகநபர் தப்பிக்க முற்பட்ட போது, பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் ‘தான் மனைவியை தாக்கியதாகவும் உயிரிழந்தது தனக்கு தெரியாது’ எனவும் சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles