இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையத்துக்கும் ஹப்புத்தளை ரயில் நிலையத்துக்கும் இடையிலான தொடருந்து மார்க்கத்தில் நேற்று கற்பாறை ஒன்று வீழ்ந்தமையால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த கற்பாறை நேற்றிரவு அகற்றப்பட்டதுடன், மலையக ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.