மன்னாரில் 17 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் மூவரையும், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
23, 18, 17 வயதுகளையுடைய இளைஞர்களே சம்பவம் தொடர்பில் கைதாகியிருந்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தாயாரால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் மூவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களை பொலிஸார் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.