தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) தீர்மானித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ட்விட்டர் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விரிவான கலந்துரையாடலுக்கு பின்னர், அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்க ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதற்கு முன்னதாக, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.