நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில், மகாநாயக்கர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரை மற்றும் யோசனைகள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
அதற்கமைய, இடைக்கால அரசை அமைக்க விருப்பத்துடன் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பௌத்த மகாநாயக்கர்களுக்கு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்து கடிதம் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை புத்தசாசன அமைச்சின் செயலாளர் கபில குணவர்தனவின் ஊடாக மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.