SLPPயின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மஹிந்தவுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்தவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, புதிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு அவர்கள் ஏற்கனவே ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
ஆனால் அதன்படி மஹிந்தவை விலக்க நடவடிக்கை எடுக்கப்படாதுள்ள நிலையில், அவர்கள் அரசுக்குள்ளேயே சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் 40க்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே மகிந்தவுக்கு இருப்பதாக அறியமுடிகிறது.