புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இன்று (25) முதல் முறையாக அமைச்சரவை கூடவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் குறித்த அமைச்சரவை கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
புதிய அமைச்சர்களுக்குரிய நிறுவனங்கள் மற்றும் அதன் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இதன்போது வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை, அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி, 19ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளது.
அத்துடன், பிரதமர் பதவி விலகி புதிய பிரதமர் ஒருவருக்கு வழிவிட வேண்டும் என்ற அழுத்தம் ஜனாதிபதி தரப்பிலிருந்து வழங்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.