Wednesday, April 30, 2025
30 C
Colombo
சினிமாநானும் சமந்தாவும் இன்னும் பிரியவில்லை - நாக சைதன்யா

நானும் சமந்தாவும் இன்னும் பிரியவில்லை – நாக சைதன்யா

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யா – சமந்தா திருமணம் நடந்த நிலையில் நான்கே ஆண்டுகளில் இருவரும் பிரிய முடிவு செய்தனர்.

இந்த நிலையில் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி விட்டதாகவும் அவருக்கு பெண் பார்க்கும் படலத்தை அவரது பெற்றோர்கள் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த அவர், மணப்பெண் நடிகையாக இருக்க கூடாது என்று நிபந்தனை விதித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நாக சைதன்யா, நானும் சமந்தாவும் இன்னும் சட்டபூர்வமாக பிரியவில்லை .அதற்குள் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி விட்டதாக வதந்தி பரவுவது வருத்தத்தை அளிக்கிறது. தயவு செய்து இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles