Sunday, October 12, 2025
29 C
Colombo
சினிமாஇயக்குநரும் நடிகருமான ஜி. மாரிமுத்து காலமானார்

இயக்குநரும் நடிகருமான ஜி. மாரிமுத்து காலமானார்

பிரபல இயக்குநரும், நடிகருமான ஜி. மாரிமுத்து இன்று காலமானார்.

அவர் (56) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார்.

தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக சில படங்கள் இயக்கி, பல படங்களில் அவர் நடித்தும் உள்ளார்.

இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார்.

பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் ஜெயிலர் படத்திலும் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.

இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று காலை மாரிமுத்து காலமானதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles