Thursday, August 7, 2025
30 C
Colombo
சினிமாநடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்

நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்

பிரபல திரைப்பட நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி (66) உடல் நலக்குறைவால் காலமானார்.

80-களின் பிரபல திரைப்பட நடிகராக இருந்தவர் ஆர்.எஸ்.சிவாஜி.

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான ‘அபூர்வ சகோதர்கள்’ திரைப்படத்தில் அவர் பேசிய ‘தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க’ வசனம் தற்போது வரை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

இவர் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் காமெடி நடிகராகவும், குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கார்கி’ திரைப்படத்தில் ஆர்.எஸ்.சிவாஜியின் நடிப்பு பாராட்டை பெற்றது.

இந்நிலையில், 66 வயதான ஆர்.எஸ்.சிவாஜி இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles