Sunday, September 14, 2025
26.7 C
Colombo
சினிமாநடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார்

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார்

நடிகர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இதற்கான அறிவிப்பை லைக்கா நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தெரிவிக்கையில்,

தனித்துவமான கதையுடன் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கக்கூடிய அனுபவத்துடன் இந்தக் கதை உள்ளது. ஜேசன் லண்டனில் திரைக்கதை எழுதுவதில் பிஏ (ஹொனர்ஸ்) முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து டொராண்டோ ஃபிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பில் டிப்ளோமா பெற்றவராவார். அவர் ஸ்கிரிப்டை விவரித்த போது பார்வையாளர்களாக எங்களுக்கு இது சரியான சினிமா அனுபவத்தைக் கொடுத்ததில் திருப்தி அடைந்தோம்.

அவர் திரைக்கதை எழுதுவதிலும் இயக்குவதிலும் மட்டுமல்லாது படத்தின் முழுமையான தயாரிப்பைப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஜேசன் சஞ்சயுடன் இணைந்து பணியாற்றும் அற்புதமான அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த படத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் இருப்பார்கள். மேலும், சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இந்தப் படத்தில் பணிபுரிய நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles