நிதி அமைச்சரின் அனுமதியின்றி வலுசக்தி அமைச்சரால் எரிபொருள் விலையை அதிகரிக்க முடியாது என ஹர்ஷ டி சில்வா எம்.பி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20) கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் வெளிநாட்டில் இருக்கும் போது வலுசக்தி அமைச்சர் எவ்வாறு எரிபொருள் விலையை அதிகரித்தார் என அவர் வினவினார்.
நிதி அமைச்சர் இல்லாத சந்தர்ப்பத்தில் இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதிக்கு உரிமை உண்டு என தினேஷ் குணவர்தன எம்.பி பதிலளித்தார்.