Sunday, July 27, 2025
29 C
Colombo
ஏனையவைபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வீடுகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வீடுகள்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NHDA) மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இணைந்து இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான கூட்டுத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

முதல் திட்டத்தின் கீழ் சொந்த நிலங்களில் வீடுகள் அமைப்பதற்கு உதவி வழங்கப்படும்.

இரண்டாவது திட்டத்தின் கீழ், சொந்தமாக நிலம் இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் விரும்பும் நகர்ப்புறங்களுக்கு வெளியே ஒரு நிலத்தில் வீடுகள் அமைக்க உதவி வழங்கப்படும்.

மூன்றாம் பிரிவின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கப்படும்.

இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நிதியுதவி வழங்குவதுடன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles