புதிய அமைச்சர்களை எந்தவொரு மேலதிக சலுகைகளையும் பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
17 பேர் கொண்ட அமைச்சரவை இன்று (18) காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.
நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் ஊழல் இன்றி அரச நிறுவனங்களின் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லுங்கள். அரச திணைக்களங்கள் பல நிதி நெருக்கடியுடன் உள்ளன. அவற்றை சீர் செய்ய வேண்டும்.
தற்போதைய நெருக்கடி மக்கள் கோரிய முறைமை மாற்றத்தை (சிஸ்டம் சேன்ஜ்) ஏற்படுத்த வாய்ப்பை தந்துள்ளது. அதற்கு உதவ வேண்டும் என இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.