Monday, November 18, 2024
25 C
Colombo
அரசியல்தற்போதைய நெருக்கடிக்கு 225 எம்.பிக்களும் பொறுப்பேற்க வேண்டும் - பிரசன்ன ரணதுங்க

தற்போதைய நெருக்கடிக்கு 225 எம்.பிக்களும் பொறுப்பேற்க வேண்டும் – பிரசன்ன ரணதுங்க

நாட்டின் தற்போதைய அவல நிலைக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டுமென அரசாங்கத்தின் பிரதம கொறடா நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த எம்.பி.க்கள் அனைவரும் இந்த குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பங்களித்துள்ளனர். அந்தவகையில் தற்போதுள்ள நிலைமைக்காக ஒரு அரசை மட்டும் குற்றம் சாட்டுவது சரியல்ல. எதிர்க்கட்சிக்கு ஒரு கொள்கையோ அல்லது ஒரு நோக்கமோ இல்லை, அதன் செயல்பாடு அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதையும் அது செய்யும் எல்லாவற்றிலும் தவறுகளைக் கண்டறிவதையும் தவிர வேறொன்றுமில்லை, ”என்று ரணதுங்க கூறினார்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles