Friday, June 26, 2026
30 C
Colombo
அரசியல்அவநம்பிக்கை - குற்றப் பிரேரணைகள் கையளிப்பு பிற்போடப்பட்டது

அவநம்பிக்கை – குற்றப் பிரேரணைகள் கையளிப்பு பிற்போடப்பட்டது

அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக முன்வைக்கப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை சபாநாயகரிடம் கையளிப்பதை ஒருவாரம் பிற்போட எதிர்க்கட்சி தயாராகிறது.

தற்போதைய பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு அது நேரடி தாக்கம் செலுத்தும் என பொருளாதார நிபுணர்கள் முன்வைத்த விடயங்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக முன்வைக்கப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்க்கட்சி முன்னதாக திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles