நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அஜித்தின் 62-வது படமான இந்த படத்திற்கு ‘விடாமுயற்சி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களில் அஜித் நடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
