ரிதியகம சபாரி சரணாலயத்திலுள்ள பெண் சிங்கமான ஷீனா மீண்டும் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.
அவை இரண்டும் பெண் குட்டிகள் எனவும் அவற்றின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் சரணாலய உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
விலங்குப் பரிமாற்ற திட்டத்தின் மூலம் ஜேர்மனி நாட்டிலிருந்து இந்நாட்டிற்கு வரவழைக்கப்பட்ட ஷீனா சிங்கம் இதற்கு முன்னதாகவும் இருமுறை குட்டிகளை ஈன்றுள்ளது.