Monday, March 16, 2026
28 C
Colombo
ஏனையவைIMF நிபந்தனைகளை இலங்கை விரைவில் நிறைவேற்றும்!

IMF நிபந்தனைகளை இலங்கை விரைவில் நிறைவேற்றும்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF ) நிபந்தனைகளை செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவேற்றுவதற்காக அரசாங்கமும் அதிகாரிகளும் இரவு பகலாக உழைத்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்லவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னர் செய்து கொள்ளப்பட்ட 16 உடன்படிக்கைகளைப் போன்று அல்லாமல் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதாகவும், இம்முறை இந்த செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் நன்கு அறிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற விவாதத்தின் போது உடன்படிக்கையின் ஒவ்வொரு சரத்து தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்ட எந்தவொரு நிபந்தனைகளையும் அல்லது சரத்துகளையும் மறைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை.

புதிய மத்திய வங்கி சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் அங்கீகரிப்பது போன்ற பல முக்கிய நடவடிக்கைகள் அடுத்த வாரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சியம்பலாபிட்டிய ஒப்புக்கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles