Friday, July 4, 2025
30.6 C
Colombo
அரசியல்கஜேந்திரகுமார் கைது - சஜித் சபையில் கண்டனம்

கஜேந்திரகுமார் கைது – சஜித் சபையில் கண்டனம்

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் அடிப்படையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபைக்கு வந்து உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டமை நியாயமான செயல் அல்லவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் தொடர்பில் எமக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன.அது வேறு விடயம்.ஆனால் பாராளுமன்றம் வரமுன்னர் அவரை கைது செய்தமை நியாயமான செயல் அல்ல.நாடாளுமன்ற சிறப்புரிமைகள் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச இதுவிடயத்தில் தெளிவான ஆணையொன்றை வழங்கியுள்ளமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளை எடுத்த பின்னர் அவரை நாடாளுமன்றம் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், பாதுகாப்புத்துறையினரின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்க விரும்பவில்லையென தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles