வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம் தொடர்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யா அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
தற்காலிகமாக ‘என்சி22’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் சக கலைஞர்கள் பற்றி விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.