வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.
‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பதுடன், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் .
இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்
இந்நிலையில் விஜய்யின் 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.
இதில் விஜய் ,ராஷ்மிகா ,இயக்குனர் வம்சி ,தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர் .