Wednesday, June 24, 2026
28.9 C
Colombo
ஏனையவைமின்சாரம் தாக்கி இளைஞன் பலி

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் வண்ணப்பனை பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த 18 வயதுடைய மாணவன் உயர்தரப் பாடசாலை மாணவர் என யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் உள்ள மரத்தில் தொங்கிய மின்விளக்கில் மின்சாரம் தாக்கி குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles